திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொங்கலுக்கு புதுத் துணி எடுத்து தராததால் மனமுடைந்த மனைவி திருமணமான 9 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி உயிரை மாய்துக்கொண்ட அதிர்ச்சியில் அப்பெண்ணின் கணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.