கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டால் நிர்வாகம் 24 மணி நேரத்தில் புகார் அளிக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றால் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தவில்லை என்றால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.