2024-2025ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு இன்று (டிச., 11) முதல் 09-04-2025 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 9849.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில், கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானி வட்டங்களிவுள்ள 24504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.