செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச., 22) பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வரும் டிச., 23 முதல் 27 வரையிலான காலக்கட்டத்தில் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது.