2025 ஜனவரி மாதம் முதல் கார்களின் விலைகளை உயர்த்துவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 2 சதவீதம் கார்களின் விலை உயர்த்தப்படும் என்றும் இந்தியாவில் விற்பனையாகும் சிட்டி, அமேஸ், மற்றும் எலிவேட் ஆகிய மாடல்களில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்திக்கான செலவுகள் கூடி இருப்பதால் இந்த விலை ஏற்றத்தை செய்ய வேண்டி உள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.