தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள மூணாறு பகுதிக்கு செல்லும் வகையில் 3 நாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஒரு நபருக்கு ரூ.7,100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் TTDC பேருந்தானது, உடுமலைப்பேட்டை வழியாக மறையூர், இரவிகுளம் தேசிய பூங்கா, மூணாறு, எக்கோ பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்பும். கூடுதல் விவரங்களுக்கு www.ttdconline.com மற்றும் 1800 4253 1111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.