இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் ஒப்பற்ற கணிதமேதையாகத் திகழ்ந்த இந்திய கணித மேதை ஶ்ரீநிவாச ராமானுஜரின் 137வது பிறந்தநாள் இன்று. 22-12-1887இல் ஈரோட்டில் பிறந்து இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம்தொட்ட அவர் கணிதம் சம்பந்தப்பட்ட நூலினை 13 வயதில் இரவல் வாங்கி படித்தது முதல் அவரது மனம் கணிதத்தில் லயித்தது. பின்னாளில் கணிதத்தில் அவர் உச்சம் தொட்டது உலகறிந்தது. இவர் தனது 32வது வயதில் உடல்நலக்குறைவால் மறைந்தார்.