தமிழக அரசு அம்பேத்கரை வைத்து நாடகம் ஆடுகிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை காரைக்குடியில் நேற்று (டிச., 22) செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பேத்கரை சிறுமைப்படுத்திய சிறுநரி கூட்டம் காங்கிரஸ். தமிழக அரசு அம்பேத்கரை வைத்து நாடகம் ஆடுகிறது. மூன்றரை வருட திமுக அரசின் திட்டங்களில் ஒரு திட்டத்திற்காவது அம்பேத்கர் பெயரை வைத்துள்ளார்களா? டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்து மத்திய அரசு நல்ல அறிவிப்பை வெளியிடும் என்றார்.