பொங்கல் விழா நாட்களில் அறிவிக்கப்பட்ட தேசிய தேர்வு முகமையின் 'யுஜிசி - நெட்' தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கடிதம் அளித்துள்ளார். இது குறித்து உரிய மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளதாக, வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். தேர்வு தேதியை தள்ளி வைக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.