200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற புறப்பட வேண்டும் என திமுக செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச., 22) திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திமுக ஆட்சி வருங்காலத்திலும் தொடர்ந்திடுவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.