புத்தாண்டை முன்னிட்டு கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முக்கிய கோயில்கள் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கொடையாளர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி