மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை நினைவுகூறும் வகையில், ராமநாதபுரத்தில் 7 அடி உயரத்தில் கேக் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொழில்துறையில் கொடிகட்டிப்பறந்த ஜாம்பவான் ரத்தன் டாடா, வயது மூப்பு காரணமாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதி காலமானார். வளர்ப்பு பிராணிகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த அவரை கௌரவிக்கும் வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள பேக்கரி ஒன்றில், 7 அடி உயர கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது.