ஆட்டோ மீது மோதிய விபத்தில் எஸ்ஐ பலி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் முத்து (52). இவர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை பைக்கில் சென்று கொண்டிருந்த அவர் எதிரே வந்த பயணிகள் ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். ஆனால், அவர் போகும்வழியிலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி