நிர்மலா சீதாராமன் ரோடு ஷோ - கூட்டமில்லாமல் போன பரிதாபம்

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்தது. கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நிர்மலா சீதாராமன் கோவையில் ரோடு ஷோ நடைபெற்றது. கோவை 100 அடி சாலையில் வாகன பேரணியில் சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார்.‌ரோடு ஷோவுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. சுமார் 200 பேர் மட்டுமே நிர்மலா சீதாராமன் வாகனத்துடன் நடந்து சென்றனர். இதனால் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி