மநீம 7 ஆம் ஆண்டு விழா- கமல் முக்கிய முடிவு

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற தனது அரசியல் கட்சியை தொடங்கி இன்றுடன்(பிப்ரவரி.21) 7 ஆண்டுகள் ஆகிறது. இதை அக்கட்சியினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர்களின் கட்சி அலுவலகத்தில் கொண்டாடவுள்ளனர். இந்த நிகழ்வில் தொண்டர்களிடையே மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் உரையாற்ற உள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசை மேற்கொண்டு முக்கிய முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி