அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை செய்ய டெண்டர்

70பார்த்தது
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அவனியாபுரம் பகுதியில் 'ஜல்லிக்கட்டு திருவிழா 2025' நடத்துவதற்கு விழா மேடைகள், தடுப்பு வேலிகள் அமைத்தல், குடிநீர் தொட்டிகள் அமைப்பது தொடர்பாக ரூ.43 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான ஒப்பந்தப்புள்ளி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வரும் ஜன., 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி