மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

மலையாள திரையுலகில் எழுந்த பாலியல் புகார்களை தொடர்ந்து நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல் புகார் காரணமாக கேரள நடிகர் சங்க பொதுச்செயலாளர் சித்திக் ஏற்கெனவே ராஜினாமா செய்த நிலையில், தற்போது மலையாள திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலும் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி