கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை வழங்கப்பட்ட உடன் EMI வசூல் செய்தது தொடர்பாக கேரள கிராமின் வங்கியை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக நிவாரணத் தொகையில் EMI பெறும் நடவடிக்கையை சரி செய்வதாக வங்கி அறிவித்துள்ளது. மேலும் EMI தொகை பிடித்தம் செய்யப்பட்ட 3 பேரின் கணக்குகளுக்கு பணம் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.