ஐபிஎல் தொடரில் நேற்றைய (ஏப்ரல் 14) போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இந்த நிலையில், அணியின் தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் கிரண் பொல்லார்டு தெரிவித்துள்ளார். இது அவர் பேசுகையில், அணியின் தோல்விக்கு தனிநபரை குறைகூற முடியாது. பாண்டியா தன்னம்பிக்கை உடையவர். கிரிக்கெட்டில் உங்களுக்கு சிறப்பான நாள்களும் இருக்கும், மோசமான நாள்களும் இருக்கும் என்றார். நேற்றைய போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ஹார்திக் பாண்டியா 43 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.