தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3, ஷமார் ஜோசப் 2, ரொமாரியோ, அகீல் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து வென்றது. பூரன் ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தினார்.