மாலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள கிரனாடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சராசரியாக 46 வயதுடைய அதிக எடை கொண்ட 186 பேரிடம் 14 நாட்களுக்கு ஆய்வு நடத்தினர். ஆய்வில், மாலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். நடைபயிற்சி, ஓட்டம், உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்தல் மூலம் மாற்றம் கிடைக்கிறது.