சென்னை மெட்ரோ ரயிலுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக 2023ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். 2022ம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்தாண்டில் 3.01 கோடி பேர் அதிகம் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனமும் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.