வியட்நாமில் தற்போது இறைச்சி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் இறைச்சிக்காக என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். இந்நிலையில் வியட்நாமில் இருக்கும் உணவகம் ஒன்றில் ஒரு மாதத்திற்கு 300 பூனைகள் சூப்புக்காக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்த 20 பூனைகளை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி விட்டனர். மேலும் அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர்.