’புத்தரின் கை’ என பெயர் கொண்ட பழம் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் கிடைக்கிறது, பார்ப்பதற்கு மனிதனுடைய கையைப் போலவே இருப்பதால், இந்தப் பழத்திற்கு இப்பெயர் வந்தது. இது எலுமிச்சைப் பழ சுவையிலே இருக்கும். அதிக வாசனையை கொண்டுள்ளதால் உணவுகள், சாலட், பானங்கள் ஆகியவற்றில் இதனைப் பயன்படுத்துகிறார்கள். புத்தரின் கை பழத்தில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளதால் இதய நலனை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.