மும்பையில் வெறும் ரூ.500க்காக தம்பியை அண்ணன் குத்திக் கொன்றுள்ளார். மும்பை கல்யாணைச் சேர்ந்த ஷமீம்கானின் தம்பி நசீம்கான் ஷமீம்கானின் சட்டை பாக்கெட்டில் இருந்து அவர் ரூ.500 பணத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தம்பி என்றும் பாராமல் கத்தியை எடுத்து நசீம்கானை குத்தி ஷமீம்கான் கொலை செய்துள்ளார். புகாரின்பேரில் ஷமீம்கானை போலீஸ் கைது செய்துள்ளது.