கைவினைக் கலைஞர்களைத் தொழில்முனைவோர்களாக உயர்த்திட "கலைஞர் கைவினைத் திட்டம்" திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவிகித மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவிகிதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. வயதுவரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மரவேலைகள், படகு தயாரித்தல், சிற்ப வேலைபாடுகள், கற்சிலை வடித்தல், கூடை முடைதல் உள்ளிட்ட பல தொழில்களை செய்யலாம்.