
மது வாங்க க்யூவில் நின்ற 10 வயது சிறுமி
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள கரிம்பனக்காடு அரசு மதுக்கடையில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை உறவினர் ஒருவர் மதுபாட்டில் வாங்க வரிசையில் நிற்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரிசையில் சிறுமி நிற்பதை கண்டு பலர் கோபமடைந்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காண அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.