உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள சேவர்ஹி பகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியின் பேருந்தில் ஒரு மாணவர் தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பள்ளி பேருந்து நடத்துநர், ஒரு மாணவரை அறைந்து தள்ளிவிடுகிறார். இந்த வீடியோ வைரலான நிலையில், கல்வி அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினர். அதில், பேருந்து நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.