தீ விபத்து: 3-வது மாடியில் இருந்து குதித்த பெண் VIDEO

70பார்த்தது
குஜராத்: அஹமதபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பெண் ஒருவர் உயிரை பணயம் வைத்து குழந்தைகளை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோக்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, பெண் ஒருவர் 2 குழந்தைகளை காப்பாற்றி விட்டு, 3-வது மாடியில் இருந்து குதித்தார். அந்தரத்தில் ஊசலாடி அந்த பெண்ணை 2-வது தளத்தில் இருந்த இருவர் காப்பாற்றினார். மேலும், இந்த தீ விபத்தில் இருந்து 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி