சீனாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற குத்துச்சண்டை வீரர் ஒருவர், செல்ல பிராணியாக எருமையை வளர்த்து அதற்கு Bull Demon King என பெயரிட்டுள்ளார். எருமையை தினமும் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, உடைகள் உடுத்தி விடுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு நெட்டிசன்களை ஈர்த்துள்ளார். இந்த எருமையால் தனக்கு சந்தோஷம் கிடைத்தாலும், அதன் மீது வரும் வாசனையால் வாடகைக்கு வீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.