வைரல் - Viral Tamil News

திடீரென பற்றி எரிந்த கார்.. உயிர் தப்பிய குழந்தை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழிச் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, காரின் டயர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. இதில், திடீரென காரில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதில், நல்வாய்ப்பாக காரில் இருந்த குழந்தை உள்பட 3 பேர் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர். நன்றி: சன் நியூஸ்

ad