பால் கெட்டுப் போவதாக புகார்: ஆவின் நிர்வாகம் விளக்கம்

84பார்த்தது
பால் கெட்டுப் போவதாக புகார்: ஆவின் நிர்வாகம் விளக்கம்
மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு முன் வைத்தனர். இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, ஆவின் பால் பண்ணைக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இது குறித்து விளக்கமளித்த ஆவின் நிர்வாகம், ”கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி