தாயுடன் இணைந்த குட்டி யானை (வீடியோ)

84பார்த்தது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று (மே 28) நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு கிணற்றுக்குள் இருந்த குட்டி யானையை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பின்னர் அந்த குட்டி யானையை தாயுடன் சேர்ந்து வைக்க வனத்துறையினர் முயற்சி எடுத்து வந்தனர். இந்நிலையில் குட்டி யானை தனது தாயுடன் இணைந்து நடந்து சேய்க்கும் காட்சிகளை வனத்துறையினர் பகிர்ந்துள்ளனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி