பிரதமர் மோடி தியானம்! ரத்து செய்யக் கோரி திமுக மனு

83பார்த்தது
பிரதமர் மோடி தியானம்! ரத்து செய்யக் கோரி திமுக மனு
பிரதமர் மோடி நாளை (மே 30) தமிழகம் வரும் நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியானக் கூடத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார். இந்நிலையில் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி அம்மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி