யூடியூபர் டிடிஎப் வாசன் மீண்டும் கைது!

10084பார்த்தது
யூடியூபர் டிடிஎப் வாசன் மீண்டும் கைது!
மதுரையில் செல்போன் பேசியபடி கார் ஓட்டிச் சென்ற யூடியூபர் டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்துள்ளனர். வாசன் வெளியிட்ட வீடியோவை அடிப்படையாக வைத்து 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அதே போல், 10 ஆண்டுகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி