பிரேக்கப் செய்த காதலிக்கு செலவு செய்த பட்டியலை அனுப்பிய காதலன்

556பார்த்தது
பிரேக்கப் செய்த காதலிக்கு செலவு செய்த பட்டியலை அனுப்பிய காதலன்
சமூக வலைதளங்களில் நபர் ஒருவர் செய்த செயலின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த நபர் 7 மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்த பிறகு, தனது முன்னாள் காதலிக்கு தான் செலவு செய்த பட்டியலை அனுப்பி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். வண்டி செலவுகள், திரைப்படங்களுக்கு சென்றது, காபி குடித்தது என அனைத்தும் இந்தப் பட்டியலில் அடங்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், செலவுகளை எக்ஸெல் ஷீட் செய்து ஒவ்வொரு மாதத்திற்கான செலவுகளையும் சேர்த்து அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். இது எங்கு, எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி