அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் தாமதமாக நாளை (நவ.11) உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு தமிழகத்தை நோக்கி வரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.