
"நாதக-வை தாண்டி இந்தியை திணியுங்கள் பாப்போம்"
தமிழகத்தில் இந்தி மொழியை வலுகட்டாயமாக திணிக்கும் போக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு கைவிட வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் மொழி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டகளை சந்தித்துள்ளது தமிழகம். மற்ற மாநிலங்கள் ஏற்கிறது என்றால், நாங்களும் ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்" என சவால் விடுத்துள்ளார்.