ஆப்ரிக்க நாடான காங்கோவில் திடீரென பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நோய் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்துக்குள் நோயாளிகள் உயிரிழப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதன்முறையாக இந்த மர்ம நோய் பாதிப்பு அடையாளம் காணப்பட்டது. இதுவரையில் 419 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.