பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 19வது தவணை நேற்று பிரதமர் மோடியால் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் சிலருக்கு ரூ.2000 வரவு வைக்கப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதற்கு நீங்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது e-KYC மற்றும் நிலப் பதிவுகள் சரிபார்ப்பு துல்லியமாக முடிக்கப்படாததுதான் காரணம் என கூறப்படுகிறது. இதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTPயை பயன்படுத்தி போர்டல் அல்லது செயலி அல்லது CSC மையத்தில் e-KYC செய்தால் பணம் வரவு வைக்கப்படும்.