சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருடிய பைக்கை, திருடன் ஒருவர் ரூ.1500 பணம் மற்றும் மன்னிப்புக் கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு நிறுத்திச் சென்றுள்ளார். Black Panda என்ற பெயரிலான கடிதத்தில், "அவசரத்துக்கு எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து கொண்டுவந்துள்ளேன். ரூ.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் இருக்கு. எப்படியும் கெட்ட வார்த்தை பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்" என எழுதப்பட்டுள்ளது.