தெலங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. சித்திப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நரசிம்மலு - நாகரத்னா தம்பதி. நாகரத்னா கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.