விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

62பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூர் கோயிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றம் நாளை (பிப். 26) நடக்கிறது. மார்ச் 4ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இதனால் அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி