விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ். கல்லுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த மணி -முத்துலெட்சுமி என்பவரின் ஒரே மகன் அருண்பாண்டியன் (27) இவர் டூவீலர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நான்கு மாதத்தில் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் அவரது அம்மா முத்துலட்சுமி கம்பிக்குடி நியாய விலை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் நிலையில் காரியாபட்டியில் இருந்து எஸ். கல்லுப்பட்டிக்கு டூவிலரில் பாமாயிலை எடுத்துச் சென்றபோது எஸ். கல்லுப்பட்டி பகுதியில் நான்கு வழி சாலை வேலை நடைபெற்று வருவதால் ஒரே சாலையில் எதிர் எதிரே வாகனங்கள் சென்று வருகிறது.
அருண்பாண்டியன் எஸ். கல்லுப்பட்டி சாலையை கடக்க முயன்ற போது அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து டூவிலரை ஓட்டி வந்த அருண்பாண்டியன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பேருந்தில் உடல் நசுங்கி கை, கால் உடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அருகில் இருந்தவர்கள் 108 - ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய அருண்பாண்டியனை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
ஆம்புலன்சில் வந்து கொண்டிருக்கும்போது அருண்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.