சூட்கேஸில் தலை இல்லாத சடலமாக கிடந்த இளம்பெண்

59பார்த்தது
சூட்கேஸில் தலை இல்லாத சடலமாக கிடந்த இளம்பெண்
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள கிராமத்தின் அருகே புதர்களுக்கு மத்தியில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அங்கிருந்து துர்நாற்றம் அடிக்கவே இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அந்த சூட்கேஸை திறந்துபார்த்தபோது அதில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 25-30 வயதுடைய பெண்ணின் தலையில்லாத சடலம் இருந்துள்ளது. அப்பெண் உள்ளாடையை மட்டுமே அணிந்திருந்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி