இராஜபாளையம்: ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
இராஜபாளையம்: ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இராஜபாளையம் அருகே 100 நாள் வேலை தொழிலாளர்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இராஜபாளையம் அருகிலுள்ள சமுசிகாபுரம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சம்பளம் பாக்கியை வழங்கவும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்து அய்யனார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.லிங்கம் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி சங்க நிர்வாகிகள் ரவி, முத்துக்குமாரி, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் ராமசந்திரன், கணேசமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மோடி ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க மறுக்கிறது என்றும், 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை எனவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தொடர்ந்து வேலை வழங்கவும், 100 நாள் வேலையை 150 நாள் வேலை வழங்கும் திட்டத்தை முறையாக அமுல்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி