

ஸ்ரீவி: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. அமைச்சர் பங்கேற்பு...
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை விழா. கடந்த இரண்டு நாட்களில் 1900 வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கியதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தகவல். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 300 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது, கலைஞர் கனவு இல்லத்திற்கு தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2030க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டி தமிழ்நாட்டில் குடிசை இல்லாத தமிழ்நாடு ஆக மாற்றிவிடுவார் வீட்டில் ஒருவராக இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்றார். மேலும் கடந்த இரண்டு நாட்கள் மட்டுமே விருதுநகர் மாவட்டத்தில் 1900 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி உள்ளதாக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.