ஸ்ரீவி: தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர் கைது...

62பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தார் அருகே தமிழக அரசால் தடை செய்த லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது.
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. மேலும் தகவலின்பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இரமேஷ்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வில் அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் குருசாமி என்பது தெரிய வந்தன. மேலும் விற்பனைக்கு வைத்திருந்த
லாட்டரி சீட்டை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி