விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி புதிய யூனியன் அலுவலகம் கட்டிடம் தனியார் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இறுதியாக ராஜபாளையம் மேல பாட்ட கரிசல்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஏசி வசதியுடன் நவீன முறையில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டார்.
ஊராட்சி ஒன்றிய தமிழ் மற்றும் ஆங்கில வழி தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்திருந்த அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் வளாகத்திற்குள் இருந்த தொடக்கப் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.