புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி வர மீண்டும் வரும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாத்தூர், மகாராஜபுரம், ஆயர்தர்மம், இலந்தைகுளம் கோட்டையூர் உள்ளிட்ட 7 கிராம பகுதிகளில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச்செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான
கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் உழைப்பால் தான் அதிமுக என்ற பூ 2026 ல் பூக்க இருக்கிறது. வருகின்ற தேர்தல் அதிமுகவின் பொற்காலம், திமுக வீட்டுக்கு போக வேண்டும், அதிமுக கோட்டைக்கு போக வேண்டும். ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் எடப்பாடியார் கோட்டைக்கு சென்று நாட்டை ஆள வேண்டும், அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி மலரும்.
இன்று தமிழகம் திமுக ஸ்டாலின் கையில் சிக்கிக் கொண்டு, எங்கு பார்த்தாலும் கலவரம், போதை கலாச்சாரம் விலைவாசிகள் எல்லாம் விஷம் போல் ஏறிவிட்டது, திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு கிடைப்பதில்லை அனைத்தும் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது குற்றம் சாட்டினார். கூட்டத்திற்கு அதிமுகவை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.